Friday, February 24, 2012









செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02



  அன்பு நண்பர்களே,TNSFSATHY.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள வருக! வருக!! என வரவேற்கிறோம்.
                 
        .சத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வள மையத்தின்  கிராமக் கல்வி குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 07-02-2012 இன்று  இரண்டாம் நாள்.


           மரியாதைக்குரிய வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள்சத்தி ஒன்றியம்- பெரியூர் மையத்தில் கல்விக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பில்  விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் இடது கோபி சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் மற்றும் வலது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சத்தி & தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.

                  
               திருமிகு.சுகாதார ஆய்வாளர் அவர்கள் சுகாதாரம் பற்றி குறிப்பாக பள்ளியில்  ஏழாம் வகுப்புக்கு மேல் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உடலியல் ரீதியாக தோன்றும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றிய தெளிவுரை கொடுக்க ஆசிரியைகளுக்கான,பெற்றோர்களுக்கான கடமைகள் பற்றி மிகத்தெளிவாக விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.



    திருமிகு.மு.பாலகிருஷ்ணன் M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர்-ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி,வேடர்நகர்,புதுவடவள்ளி-சத்தியமங்கலம் அவர்கள் பள்ளிக்குழந்தைகளிடம் சூழலுக்கேற்ப,குழந்தைகளோடு ஒன்றி உறவுக்கு உறவாக,நட்புக்கு நட்பாக பழகி பாடங்களை சுமையில்லாமல் ஆர்வத்தோடு கற்க ஏற்றவாறு கற்பிப்பது பற்றி விளக்கவுரை அதாவது
         ''ஆசிரியர் பணி அறப்பணி!,அதற்கே உன்னை அர்ப்பணி!!''
        என வார்த்தைகளுக்கேற்ப சுமார் இரண்டு மணி நேரம் தொய்வின்றி  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
       மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி அவர்கள் அரசுப்பள்ளி குழந்தைகள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக குறைபட்டு அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்களாகிய நமது செயலாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்.அரசு மானியங்கள் பள்ளிக்கு சரியானமுறையில் பயன்படுத்தப்படுகிறதா?எனக் கண்காணிப்பது பற்றிய  விழிப்புரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் வார்டு உறுப்பினர் உட்பட மேலும் பல உள்ளூர் பொறுப்பாளர்கள்.
         அரசியலில் நாங்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் கல்வி என்பது பொதுமக்கள் என்ற வகையில் எங்களது குழந்தைகளுக்கும் அவசியம். என பயிற்சியில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பழைய கலையனூர்  மக்கள் பிரதிநிதி அவர்கள்.அருகில் திருமிகு. ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
         வருகை புரிந்த கிராமப் பெரியோர்களுக்கு வழிகொடுத்து, பிறகு மீண்டும் தமது தமிழ்ச்சொல்லாடலால் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த சிந்திக்கத்தூண்டும் கதைகளால் அரங்கத்தை கலகலக்க வைத்த திருமிகு.மு.பாலகிருஷ்ணன்.M.A.,D.T.Ed.,  இடைநிலை ஆசிரியர் அவர்கள்.


             மரியாதைக்குரிய ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் அரசு கல்விக்காக செலவிடப்படும் நிதிகள் மற்றும் கட்டுமானங்கள்,அதனைக் கண்காணிப்பது,பாதுகாப்பது என  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடமைகள் & உரிமைகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

      பெரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணிணியில் சர்வ சாதாரணமாக நுட்பங்களைக் கையாண்ட காட்சி மேலே மற்றும் கீழே உள்ள படங்கள்.



         கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு பரிமாற பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் இவர்களுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.








          கோபி செட்டிபாளையம் சுகாதார ஆய்வாளர்  திருமிகு.மணி அவர்கள்  கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் சுகாதாரம் பற்றி கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்த காட்சி.மேலே உள்ளபடம்.(அதோடு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்,என அனைவருக்கும் அவரது கைபேசி எண் கொடுத்த பாங்கு பாராட்டுக்குரியது)





    

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01

6 February, 2012



அன்பு நண்பர்களே,
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக TNSFSATHY.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக !! என வரவேற்கிறோம்.
    
 அனைவருக்கும் கல்வி இயக்கம்
 அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்-சத்தியமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பாக கிராமக் கல்வி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஜனவரிமாதம் 06-ந்தேதி இன்று துவங்கி   மூன்று நாட்கள் நான்கு மையங்களில் நடைபெறுகின்றன.
                

           சத்தியமங்கலம் ஒன்றியம் சார்பாக சத்தி-1, சதுமுகை,பகுதிகளுக்கான மையம் சத்தியமங்கலம் காவல்நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த இந்த முகாமின் துவக்கவிழா காலை 10-00 மணிக்குத் துவங்கியது.

              சத்தியமங்கலம் அரசு ஆண்கள்மேனிலைப்பள்ளி ஆசிரியர்                           திருமிகு.செ.தங்கராஜ் அவர்கள்.இடமிருந்து இரண்டாவது படம்.

         
   மரியாதைக்குரிய வட்டார வள மையத்தின்  திட்ட மேற்பார்வையாளர் அவர்கள் முகாமின் துவக்கவுரை ஆற்றிய காட்சி மேலே உள்ள படங்கள்.அருகில் திருமிகு.தொடக்கக்கல்வி முன்னாள் அலுவலர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் .


   கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  மற்றும் மக்கள்பிரதிநிதிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியைப்பெருமக்கள் இவர்களுடன் ஏனைய பெற்றொர்கள்.


         வட்டார வள மைய  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு ரகுபதி அவர்கள் கிரமக்கல்விக்குழு உறுப்பினர்களின் கடமையும்,உரிமையும் பற்றி விளக்குகிறார்.அருகில் வட்டார வள மைய திருமிகு.மேற்பார்வையாளர் அவர்களுடன்  கல்வியின் சட்டப்படியான உரிமைகள் பற்றி உரைநிகழ்த்த வருகைபுரிந்த  திருமிகு.வழக்குரைஞர் அவர்கள்.மேலே உள்ள படம்.
   
   
         திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள், கல்வியின் உரிமைகள்,அரசின் சலுகைகள் பற்றிய விளக்கவுரையினை ஒளிப்படமாக திரையிட அதனை விளக்குகிறார் திருமிகு.G.R.ரகுபதி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.


                      முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-01மேலே உள்ள படம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஓரங்க நாடகம்.


                     முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-02


     

                      முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-03

                        முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-04

     
              முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-05

                திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை அவர்கள்.

        திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை-( காளியப்ப கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) அவர்களது படைப்பால் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் ''வேலைக்காரி முனியம்மா'' என்னும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூக சீர்திருத்த நாடகம்.மற்றும்நாடகத்தில் நடிப்பால் அசத்திய மாணவக்குழந்தைகள்.மேலே உள்ள படங்கள் ஐந்தும்.


    
 அனைவருக்கும் மதிய உணவு...........பரிமாறும் ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியைகள்.(இவை தவிர இடையிடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டன.)

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-05

     

14 February, 2012


   அன்பு நண்பர்களே,
                  tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம். இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஐந்தாவது நாள் .

          கல்கடம்பூர் மலைப்பகுதி உயர்நிலைப்பள்ளிக்கூடம்.மேலே உள்ள படம்.


     கல்கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்வமுடன் ஆய்வு செய்யும் காட்சி மேலே உள்ள படம்.

     மரியாதைக்குரிய மெய்யப்பன், ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள கிராம கல்விக்குழு உறுப்பினர்களை வரவேற்று அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக கல்விக்கான வசதிகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.        
   ''நாட்டாமைக்கல்வி'' என்னும் மிகச்சிறப்பான  கல்வி சீர்திருத்த நாடகம் அரங்கேற்றிய பள்ளி மாணவக்குழந்தைகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் மேலே உள்ளபடம்.


             மலைப்பகுதி பள்ளி மாணவக்குழந்தைகளின்  படைப்பாற்றலை வெளிப்படுத்திய திருமிகு.ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.ரகுபதி அவர்கள் விளக்கவுரையை ஆவலுடன் கேட்கும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கிராமக்கல்வி உறுப்பினர்கள், மேலே உள்ள படம்.


      ஆசிரியர் பயிற்றுனர்களான 1)திருமிகு.ரகுபதி அவர்கள் மற்றும் 2)திருமிகு.மெய்யப்பன் அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்களை கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் கண்காணித்து பள்ளியின் நலனுக்காக அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும்பயன்படுத்த வேண்டும் என  விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
              மதிய உணவு பரிமாற்றம் மற்றும் கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இளைப்பாறும் காட்சி மேலே உள்ள படங்கள்.



          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவக்குழந்தைகளின் வில்லுப்பாட்டு அனைவருக்கும் மகிழ்வூட்டும்! என பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.


          ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சியளித்தது பற்றி அப்பள்ளி ஆசிரியர் விவரிக்க அதனை கேட்டறிகின்றனர் ஆசிரியர் பயிற்றுனர்கள்.

           இதோ ''பொது அறிவு தேவை'' என்பதை உணர்த்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.பங்கு பெற்ற மாணவக்குழந்தைகள் 1)சரத்பரணி.ரு. (2)கௌதம்.ப.(3)சுவேதா.கோ.(4)நியூபாரத்.சி. இவர்கள் நால்வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். ஐந்தாவதாக பரத்.சி. என்ற மாணவன் நான்காம் வகுப்பு.பயின்று வருகின்றனர்.

        கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கு.சக்திவேல்.இவர் ஓவியம் வரைவதில் மிகவும் திறமை உள்ளவர் என  அறிமுகப்படுத்தி வைக்கிறார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.பொ.மணி,B.Lit.,D.T.Ed.



  மேலே உள்ள இரண்டு படங்களும் மாணவன் சக்திவேல் அவர்களின் கைவண்ண ஓவியங்கள்.(இன்னும் மனித உருவங்கள்,இயற்கை காட்சிகள்,என  பல படங்கள் வரைந்துள்ளார்.)
     இன்று நடந்த இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,சத்தி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் ராமம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியை அப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.ஃப்ராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியை மரியாதைக்குரிய சரஸ்வதி அவர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு  சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திய விதம் பற்றியும் அதேபோல இங்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்படுத்தி ஊர்மக்களும் ஒன்றிணைந்து பள்ளியை சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Wednesday, February 22, 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் - சத்தியமங்கலம் வட்டார வளமையம் சார்பில் சத்தி வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிப்பது தொடர்பான பயிற்சி நடைபெற்று வருகிறது.22.02.2012 அன்று நடைபெற்ற பயிற்சி காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளது.

பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனிக்கிறார்கள்.




கருத்தாளர் திரு.பாலகிருஷ்ணன் கற்றல் குறைபாடு குறித்து விளக்குகிறார் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர்.




பயிற்சியில் சத்தி-அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள் திரு.சிவக்குமார் மற்றும் திருமதி.கல்பனாதேவி ஆகியோர் பயிற்சியின் போது கவனிக்கிறார்கள்.

Tuesday, February 21, 2012

IED TRAINING 2012



சத்தி - வட்டார வளமையத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியில் சிறப்பு ஆசிரியா் திரு.உதயகுமார் அவா்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புற உலக சிந்தனைக் குறைபாடு ( ஆட்டிசம்) குறித்து விளக்குகிறார்.




ஆசிரியர் பயிற்றுநர் திருமிகு.த.முருகன் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்தும் விளக்குகிறார்.


பயிற்சியில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள்.