கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01
6 February, 2012
அன்பு நண்பர்களே,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக TNSFSATHY.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக !! என வரவேற்கிறோம்.
அனைவருக்கும் கல்வி இயக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்-சத்தியமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பாக கிராமக் கல்வி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஜனவரிமாதம் 06-ந்தேதி இன்று துவங்கி மூன்று நாட்கள் நான்கு மையங்களில் நடைபெறுகின்றன.
சத்தியமங்கலம் ஒன்றியம் சார்பாக சத்தி-1, சதுமுகை,பகுதிகளுக்கான மையம் சத்தியமங்கலம் காவல்நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த இந்த முகாமின் துவக்கவிழா காலை 10-00 மணிக்குத் துவங்கியது.
சத்தியமங்கலம் அரசு ஆண்கள்மேனிலைப்பள்ளி ஆசிரியர் திருமிகு.செ.தங்கராஜ் அவர்கள்.இடமிருந்து இரண்டாவது படம்.
மரியாதைக்குரிய வட்டார வள மையத்தின் திட்ட மேற்பார்வையாளர் அவர்கள் முகாமின் துவக்கவுரை ஆற்றிய காட்சி மேலே உள்ள படங்கள்.அருகில் திருமிகு.தொடக்கக்கல்வி முன்னாள் அலுவலர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் .
கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள்பிரதிநிதிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியைப்பெருமக்கள் இவர்களுடன் ஏனைய பெற்றொர்கள்.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு ரகுபதி அவர்கள் கிரமக்கல்விக்குழு உறுப்பினர்களின் கடமையும்,உரிமையும் பற்றி விளக்குகிறார்.அருகில் வட்டார வள மைய திருமிகு.மேற்பார்வையாளர் அவர்களுடன் கல்வியின் சட்டப்படியான உரிமைகள் பற்றி உரைநிகழ்த்த வருகைபுரிந்த திருமிகு.வழக்குரைஞர் அவர்கள்.மேலே உள்ள படம்.
திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள், கல்வியின் உரிமைகள்,அரசின் சலுகைகள் பற்றிய விளக்கவுரையினை ஒளிப்படமாக திரையிட அதனை விளக்குகிறார் திருமிகு.G.R.ரகுபதி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-01மேலே உள்ள படம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஓரங்க நாடகம்.
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-02
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-03
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-04
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-05
திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை அவர்கள்.
திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை-( காளியப்ப கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) அவர்களது படைப்பால் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் ''வேலைக்காரி முனியம்மா'' என்னும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூக சீர்திருத்த நாடகம்.மற்றும்நாடகத்தில் நடிப்பால் அசத்திய மாணவக்குழந்தைகள்.மேலே உள்ள படங்கள் ஐந்தும்.
அனைவருக்கும் மதிய உணவு...........பரிமாறும் ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியைகள்.(இவை தவிர இடையிடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டன.)
மரியாதைகுரிய ஐயா,வணக்கம்.இந்தப்பதிவில் மேலே முகப்பில் வரவேற்பு முன்னுரையில் மாற்றம் செய்க.
ReplyDelete